தருமபுரி மாவட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி
தர்மபுரி அடுத்த செம்மனஹள்ளி காட்டுப்பகுதியில் போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சியை சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழங்குகிறார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் காவல் உட்கோட்டங்களில் உள்ள பகுதிகளில் காவல் துறையில் பணியாற்றும் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 1,400 பேர் காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எந்த மாவட்டங்களில் பணியாற்றினாலும் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது சொந்த மாவட்டங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நினைவூட்டல் பயிற்சியை முடிக்க வேண்டும்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான துப்பாக்கி சூடும் நினைவூட்டல் பயிற்சி கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இந்த பயிற்சியானது வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த, வெளி மாவட்டங்களில் பணியாற்றும் காவலர்கள் பங்குபெற்று தங்களது நினைவூட்டல் பயிற்சியை முடித்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி ரோடு அருகே உள்ள வனபகுதியில் காவல் துறையினர் துப்பாக்கிச் சுடும் நினைவூட்டல் பயிற்சி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நடைபெற்ற வருகிறது. இதில் தினந்தோறும் 100 முதல் 150 வரையிலான காவலர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கிச் சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறார்.
இந்த நினைவூட்டல் பயிற்சியில் துப்பாக்கியை பிடிக்கின்ற விதம், சுடுவதற்கு தயாராவது, எவ்வாறு துப்பாக்கியை கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சியை உதவி ஆய்வாளர் சின்னசாமி வழங்கி வருகிறார். அதே போல் எந்த வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்ட விவரங்களும் காவலர்களுக்கு நினைவூட்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவலர்களுக்கும் 3 சுற்றுகள் என 15 குண்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு 9 mm பிஸ்டல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து காவலர்களுக்கு 303, 7.62 mm போர்டு ஆக்சன், இன்சாஸ் என காவலர்களுக்கு மூன்று ரக துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் 15 குண்டுகளில் எத்தனை குண்டுகள் இலக்கினை வெற்றிகரமாக அடைகின்றனர் என்பது குறித்தும், துப்பாக்கி சுடும் அவர்களே தங்களது இலக்கு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.
இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நினைவூட்டல் பயிற்சியில் முடியில், சிறப்பாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி (குட் சூட்டர்) செய்த காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்தி தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu