பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வுக்கு மீண்டும் கொரோனோ தொற்று

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வுக்கு மீண்டும் கொரோனோ தொற்று
X

ஏ.கோவிந்தசாமி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமிக்கு மீண்டும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கோவிந்தசாமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா 2-வது அலையின் போது பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ.வுக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தார். அதன் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கோவிந்தசாமி எம்.எல்.ஏ.வுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!