மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

நோயினால் பாதிக்கப்பட்ட பயிரினை கவலையுடன் காட்டும் விவசாயிகள்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மரவள்ளியை பூஞ்சை, செம்பேன் தாக்கியதால் நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பொம்மிடி, கடத்தூர், பி.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஓராண்டு கால பயிரான மரவள்ளி தற்போது சாகுபடி செய்யப்பட்டு, ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மரவள்ளி கிழங்கு செடி தற்பொழுது கிழங்கு வைக்கும் நிலையில், செடிகளை முழுவதும் செம்பேன், வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் தாக்கி வருகிறது. இதனால் செடிகள் வளராமல் அழுகும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு இந்த வெள்ளை பூஞ்சை நோய் பரவி, சாகுபடி செய்துள்ள மொத்த பயிர்களையும் அழித்து வருகிறது. இதனால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஒரு ஏக்கருக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இந்த நஷ்டஈட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்