பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில் 3 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில்  3 பேர்  கைது
X
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம் செய்த விவகாரத்தில், போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அடிமலைபுதூர் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், கடந்த ஜுலை 1 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து, அவரை திருமணம் செய்து உள்ளார்.

இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அந்த வாலிபருக்கு உதவியாக இருந்த சிலர் மீது, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபர், அவரது உறவினர்களான ரவிக்குமார், சுகவனம் ஆகிய மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!