பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் - 2 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் -  2 பேர் கைது
X

பாப்பிரெட்டிப்பட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட 912மதுபாட்டில்கள் 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூர்- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள சாமியாபுரம் கூட்ரோடு சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி, சோதனை செய்ததில் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வாகனம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முழுமையாக சோதனை செய்ததில் அதில் 912 டாஸ்மாக் மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்கடாசலம் வயது 40 பிரகாசம் வயது 46 இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் ன் மதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!