பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 100 சதவீத கொரோனோ தடுப்பூசி ஆய்வு கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தடுப்பூசி போடுவது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் தலைமையில் நாளை நடைபெறும் கொரோனோ தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், கணக்காளர்கள், மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.
அவர்களிடம் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொள்ள, தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்களை, கண்டறிந்து அவர்களை தடுப்பூசி போட வைக்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறிந்து நேரடியாக அழைத்து வந்து அவர்களை தடுப்பூசி போட வைக்க வேண்டும்.
அவருடைய புள்ளி விவரங்களை கொடுக்க வேண்டும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் அனைவரும் 100 சதவீத தடுப்பூசி போட்டுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரிசங்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu