பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை
X
பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாலகோடு அடுத்த காட்டம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி, வயது 70. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து வைத்த அவர், மகனுக்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பாலக்கோடு அடுத்த பி.செட்டிஹள்ளியை சேர்ந்தவர் சித்தன், வயது 70. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு விவசாய நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார். இதில், தந்தை, மகனுக்கு வழித்தட பிரச்னை ஏற்பட்டு வந்தது. மனவேதனையில் இருந்த சித்தன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவங்கள் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்