தர்மபுரி அருகே போலீஸாரை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்கள் கைது..!

தர்மபுரி அருகே போலீஸாரை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்கள் கைது..!
X
தர்மபுரி அருகே போலீஸாரை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்கள் கைது

தர்மபுரி அருகே போலீஸாரை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்கள் கைதுர்மபுரி அருகே காவல் துறையை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் காவல்துறை விமர்சித்து சிறுவர்கள் சிலர் வீடியோக்களை எடுத்து அதை வாட்ஸ் அப்பில் பரவ விட்டனர். அந்த வீடியோக்களில் பேசி சிறுவர்கள் "கலவரம் செய்தால் தமிழகம் தாங்காது எங்களை அடக்குவதற்கு காவல்துறை பத்தாது" என பேசியுள்ளனர். மற்றொரு வீடியோவில் இரண்டு பேர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு நடனமாடியபடி நாங்கள் "சொல்வது தான் இங்கு சட்டம்" என பேசினார் மூன்றாவது வீடியோவில் "நாங் மனசு வைத்தால் நீங்க இருக்கவே மாட்டீங்க" என்ற வாசகங்களை பேசி பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் இதுகுறித்து பஞ்சப்பள்ளிபோலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த வீடியோக்களை எடுத்து பரவவிட்டது பஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய 6 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ செங்கதிர் தலைமையிலான போலீசார் சிறுவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.பின் பாலக்கோடு மற்றும் தர்மபுரி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture