காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியிடம் பலாத்கார முயற்சி, வாலிபர் கைது

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியிடம் பலாத்கார முயற்சி, வாலிபர் கைது
X

பைல் படம்

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சப்பானி பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி. காரிமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் விஜயகுமார் என்பவர் மாணவியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது மாணவியின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மாணவி நேற்று காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!