குழந்தை இல்லாத ஏக்கம்: காரிமங்கலத்தில் இளம்பெண் தீக்குளிப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: காரிமங்கலத்தில் இளம்பெண் தீக்குளிப்பு
X
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சத்யா (25), இந்த தம்பதியினர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது சத்யா குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளான சத்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகாமையில் இருப்பவர்கள் சத்யாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சத்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் மட்டுமின்றி, காரிமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!