பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் போதிய நீர் இல்லாததால்விவசாயிகள் கவலை
போதிய நீர் இல்லாமல் காட்சியளிக்குதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் 5 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருட்ஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் இருந்து உற்பத்தியாகும் சின்னாறுஆற்றின் மேலகிரியும், ஊடேதுர்க்கம் மலைகளும் ஆற்றுக்கு நெருங்கி இருக்கும் பஞ்சப்பள்ளியில் கட்டப்பட்டது சின்னாறு அணையாகும்.இந்த அணை 1977இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள். நீர்பிடிப்பு பரப்பு 420ஏக்கர் , மொத்த கொள்ளவு 50 அடியாகும். இந்த அணையின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 5000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
அணையின் மூலம் பஞ்சப்பள்ளி ஏரி, பெரியானூர் ஏரி, அத்திமுட்லு ஏரி, செங்கன்பசுவன்தலாவ் ஏரி, தும்பலஹள்ளி அணை, கடகத்தூர் ஏரி, ராமக்கா ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பும்.. சின்னாற்றின் மூலம் பாலக்கோடு, பென்னாகரம் தாலுகா பகுதியில் பாசன நீர் தேவை மற்றும் குடிநீர் நீர் ஆதாரமாக உள்ளது.தர்மபுரி நகராட்சி பகுதிக்கு பஞ்சப்பள்ளி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு சின்னாற்று நீர் பெரும் அளவில் கை கொடுத்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை,வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.ஆனால் நடப்பு பருவத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் செய்தால் மட்டுமே அணை நிரம்பி விவசாயம் செய்ய முடியும் என்ற சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu