வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் தர்மபுரி, தொப்பூர், அதியமான் கோட்டை, மதிகோன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கஞ்சா, குட்கா ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வத்தல்மலை அடிவாரத்தில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்

அப்போது ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் காரிமங்கலம் அடுத்த மார்க்கம்பட்டி காளப்பனஹள்ளியை சேர்ந்த சேகர் என்கின்ற ராஜசேகர் என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்ததாக கூறினார். இதனை அடுத்து போலீசார் அதிரடியாக அவரது வீட்டை சோதனை செய்து சுமார் 500 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை அதியமான்கோட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா