பாம்பு கடித்த முதியவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்ற அவலம்

பாம்பு கடித்த முதியவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்ற அவலம்
X

சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளியில் தூக்கி செல்லும் காட்சி 

வட்டவனஅள்ளி ஊராட்சியில் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என பொதுமக்கள் புகார்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஅள்ளி ஊராட்சி யில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அடர்ந்த மலை கிராமத்தில், மலை மீது உள்ள இந்த 3 கிராமங்களுக்கும் போதிய சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. இதனால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு சுமார் 7 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டும்.

இந்நிலையில் இன்று அலகட்டு கிராமத்தை சேர்ந்த சித்தபெலான் (75) என்ற முதியவர், விவசாய நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக, வயலில் முதியவரை பாம்பு கடித்துள்ளது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த முதியவர் பாம்பு கடித்ததை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மருத்துவம னைக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், மூங்கிலில் போர்வையால், தூளி கட்டியுள்ளனர். அப்பொழுது பாம்பின் விஷம் உடலில் பரவாமல் இருக்க முதியவருக்கு பாம்பு கடித்த இடத்தில், சுண்ணாம்பு வைத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து, தூளி கட்டிய பிறகு, முதியவரை அமர வைத்து உறவினர்கள் எடுத்து சென்றனர்.

தொடர்ந்து மலை இறங்கிய பிறகு, அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் சாலை வசதி வேண்டி, மலைவாழ் மக்கள் போராடி வரும் நிலையில், இன்னும் சாலை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவ சேவைக்கு செல்ல தூளி கட்டி எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது .

Tags

Next Story