/* */

எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடியினர் தஞ்சம்: போலீசார் பாதுகாப்பு

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அரூரை சேர்ந்த காதல் ஜோடியினர் தஞ்சம் புகுந்தனர்.

HIGHLIGHTS

எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடியினர் தஞ்சம்: போலீசார் பாதுகாப்பு
X

அரூரில் காதல் ஜோடிகள் சுவேதா-விஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அழைத்து சென்றனர்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகேயுள்ள கொங்கரப்பட்டி பழத்தோட்டத்தை சேர்ந்த சரவணன் மகள் சுவேதா, 19. இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 29ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்த சுவேதாவை காணவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை என்றும், தனது மகளை கொண்ரம்பட்டியை சேர்ந்த விஜி, 20, என்பவர் அழைத்து சென்றதாக கம்பைநல்லுார் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காதல் ஜோடியினர் தஞ்சம் புகுந்தனர். அவர்களை கம்பைநல்லூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வகையில், அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முழுமையான விசாரணை மேற்கொண்டு பிறகு சரவணனின் மகள் தனது கணவருடன் செல்வதாக உறுதிமொழி அளித்தார். பின்னர் காவல்துறையினர் அவர்களை பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

காதல் ஜோடியினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!