பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த காதல் ஜோடி: அரூரில் நீதிமன்றத்தில் பரபரப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த காதல் ஜோடி: அரூரில் நீதிமன்றத்தில் பரபரப்பு
X

அரூர் நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த காதல் ஜோடியால்-நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அரூர் நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த காதல் ஜோடியால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னகுட்டி மகன் பிரதீப்(25) என்ஜினியர் படித்தவர். போயர் சமூகத்தை சேர்ந்தவர். பிரதீப் அதே பகுதியில் உள்ள ஈஞ்னூர் கிராமத்தை சேர்ந்த விக்ரமன் மகள் ஜனனி (22) (எம்எஸ்சி) (ஐடி) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தொடர்ந்து இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 6 ஆம் தேதி தனது மகளை காணவில்லை என ஜனனியின் தந்தை விக்ரமன் மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.

ஆனால் பிரதீப்-ஜனனி இருவரும் கடந்த 8-ஆம் தேதி ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். பின்னர் தருமபுரி எஸ்பிக்கு தகவல் கொடுத்து போலீஸிடம் காதல் ஜோடியை ஒப்படைத்தார். இந்நிலையில் பாதுகாப்பு கருதி கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடியை தங்க வைத்தனர்.

ஆனால் நேற்று இரவு காணாமல் போன பெண் குறித்து புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பெண்ணின் உறவினர்கள் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காதல் ஜோடி விவகாரத்தில் மொரப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்புடன், காதல் ஜோடியினை அரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அரூர் நீதிமன்றத்தில் விக்ரமனிடத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனனி எனது பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்றும், கணவருடன் சென்று ஓசூரில் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைப்பு நடத்தி கொள்கிறேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து காதல் ஜோடியினை போலீஸார் பாதுகாப்பாக திரும்பிச் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அசமாபாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க காதல் ஜோடியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், அரூர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story