அரூர் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

அரூர் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
X

பைல் படம்.

அரூர் அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுமி அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம், 13ல், காலை, 10:00 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மத்தியம்பட்டியை சேர்ந்த சிங்காரவேலன், 28, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், இது குறித்து வெளியில் கூறினால் சிறுமி மற்றும் அவரது அம்மாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து ஆசிரியரிடம் நான்கு நாட்களுக்கு முன், சிறுமி கூறியுள்ளார். தகவலின்படி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரித்துள்ளார்.

சிறுமியின் தாய் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, இன்ஸ்பெக்டர் சரோஜா விசாரித்து, சிங்காரவேலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். சிங்காரவேலனுக்கு ஏற்கனவே, திருமணமானது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!