நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்
X

தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்,நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அ.ஜெயந்தி அழகரசு தலைமை வகித்தார். ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் டி.தேவி சங்கர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் எம்.கணேசமூர்த்தி வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி மோகன்,வட்டார வள அலுவலர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நடைபெற்ற பணிகளை தணிக்கை செய்தனர்.

மேலும் பணி தள ஆய்வு,தொழிலார்களின் உரிமை, தினசரி வருகை பதிவேடு சரி பார்த்தல், கள ஆய்வு திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து வேலை அட்டைகளை இணைய தளபதிவுகளுடன் ஒப்பீடு செய்து ஆய்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இக் கிராம சபை கூட்டத்தில் தணிக்கையாளர் மேனகா சண்முகம், பணி தள பொறுப்பாளர்கள் சரஸ்வதி, ஜெயலட்சுமி மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!