வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை
X

வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி

வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

தருமபுரி மாவட்டத்தில், அரூர் வருவாய் உட்கோட்டத்தில் அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனங்களில் மான், மயில், முயல், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்டவை உள்ளன. தற்போது நிலவும் கடும் வெயில் மற்றும் வறட்சியால் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி விலங்குகள் சாலையை கடந்து ஊருக்கு நுழையும். அந்த சமயத்தில் வானகங்களில் அடிப்பட்டு உயிரிழந்து விடுகின்றது. இதனை தடுக்கும் விதமாக மொரப்பூர் வனத்துறை சார்பில், கீழ்மொரப்பூர், கொளகம்பட்டி மற்றும் அரூர் வனச்சரகத்திகுட்பட்ட தோல்தூக்கி, கூக்கட்டப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் செயற்கை முறையில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனத்தைவிட்டு வெளியேறாது என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியிலேயே தண்ணீர் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!