அரூர் அருகே திருமணமான புது பெண் சாவு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

அரூர் அருகே திருமணமான புது பெண் சாவு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
X

அரூர் அருகே வேலனூரில் மர்மமாக இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய உறவினர்களிடம் போலீசார் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அரூர் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் அடுத்த வேலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் வயது 24. இவருக்கும் சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டம் கெளகாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் மீனா வயது 19 என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை வேலனூர் பகுதியில் உள்ள குணசேகரன் என்பவரின் விவசாய கிணற்றில் மீனா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மீனா சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், டி.எஸ்.பி ராஜா சோமசுந்தரம், தாசில்தார் கனிமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின் நள்ளிரவு 12 மணிக்கு மீனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு