எர்ரபையனஅள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் எர்ரபையனஅள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட 42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பழ தோட்டத்தில் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்களாக ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் முழுமையாக புனரமைத்து அடுத்த ஆண்டிற்குள் மழை நீர் முழுவதையும் ஏரிகளில் தேக்கியும், புதிய நீர் நிலைகளை அமைத்தும், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தும் பணிகளை முடிப்பதாகவும், அதன் மூலம் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்திட வேண்டும். அது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள், நடவு செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 42 ஏக்கர் பரப்பள வில் அமைக்க பட்ட பழத்தோட்டத்தை தொடர் பராமரிப்பு மூலம் பலன் தரும் பத்தாயிரம் மரக்கன்றுகளையும் பராமரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட வேண்டும். அதேபோல் எர்ர பையனஹள்ளி ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தூய்மை யான பசுமையான கிராம மாக மாற்றுவதே இலக்கு என்பதையும் பொதுமக்கள் ஆதரவுடன் செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பழ தோட்டம் பகுதியில் புதிதாக சீரமைக்கபட்ட ஏரிக்கரை பகுதியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் அக்கிராமத்தில் அம்ருத் மஹோத்சவ் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் வழங்கினார். இதில் ஊராட்சி துணைத் தலைவர் ரஞ்சித் குமார், செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வார்டு உறுப்பி னர்கள், ஊராட்சியை சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அனைத்து திட்ட பணியாளர்கள் எர்ரபையனஹள்ளி ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu