புள்ளி மானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு
மான் வேட்டையாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர்
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வனச்சரகத்திற்குட்பட்ட பரிகம் காப்புக்காடு, வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சரகத்தில் கடந்த 4 -ம் தேதி காலை சுமார் 5.30 மணிக்கு மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த இராமசாமி மகன் துரை(45), என்பவர் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருக்கும் போது அப்பகுதியில் தர்மபுரி வனச்சரக பணியாளர்கள், வனப்பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஒடி விட்டனர்.
பின்னர் தர்மபுரி வனச்சரக அலுவலர் துரையை விசாரணை செய்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.
அதன் பேரில் மாவட்ட வன அலுவலர், அப்பல்ல நாயிடு உத்தரவுபடி வன உயிரின குற்ற வழக்கு பதியப்பட்டு இணக்க கட்டணமாக மேல் பூரிக்கல் பகுதியைச் சேர்ந்த துரை (45) என்பவருக்கு, 4 லட்சம் ரூபாயும், முனிய கவுண்டர் மகன் பாக்யராஜ் (38) என்பவருக்கு 35 ஆயிரம் ரூபாயும், மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசல மகன் பெரியசாமி (42) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், கம்பம் பட்டி பகுதியைச் சார்ந்த சுந்தர்ராஜன் மகன் சதீஷ்குமார் (32) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், சருகு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சித்தநாதன், என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரசிம்மன் (50), தலை கொண்டான் மகன் ஜெய்சங்கர் (29) ஆகிய இருவருக்கும் தால 10 ஆயிரம் ரூபாய் என 8 நபர்களிடமிருந்து விலங்கினை வேட்டையாடிய குற்றத்திற்காக இணக்க கட்டணமாக மொத்தம் ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu