தர்மபுரியில் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
கடையில் ஆய்வு மேற்கொள்ளும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி
தர்மபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு விதிமுறைகள் படி நடைமுறை பின்பற்ற ப்படுகின்றனவா எனவும், இல்லாத பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காரிமங்க லத்தில் மொரப்பூர் ரோடு, பைபாஸ் சாலை, அகரம் பிரிவுரோடு, தர்மபுரி ரோடு, பேருந்து நிலையம் பகுதி, பாலக்கோடு காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வில் ஒரு சில தயாரிப்பு கூடங்கள் மற்றும் பேக்கரிகளில் இருந்து பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 4 லிட்டர், அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட கார, இனிப்பு வகைகள் 22 கிலோ மற்றும் காலாவதியான குளிர்பா னங்கள், உரிய விபரங்கள் அச்சிடாத சோளமாவு பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது.
மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 1000 வீதம் 4 கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய சுகாதாரம் காணப்ப டாத, பராமரிக்காத 2 கடைகளுக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளித்து 3 தினங்களுக்குள் உரிய குறைபாடுகள் களைந்து பதில் அறிக்கையை புகைப்படத்துடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆய்வில் இனிப்பு கடைகளில் பணியாற்றும் பணி யாளர்கள் சுத்தம், உரிய உடைகள், கையுறைகள் மற்றும் சுற்றுப்புற சுத்தம் ஆகியவற்றை பிற்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் முறையாக பெற்று புதுப்பித்தல் வேண்டும். புதுப்பிக்காதவர்கள் மற்றும் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, சான்றி தழ்கள் நுகர்வோர் பார்வையில்படுமாறு மாட்டி வைக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார் .
தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu