அரூர் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

அரூர் அரசு கல்லூரியில்  மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
X

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா திட்ட விளக்கவுரையாற்றி, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது மற்றும் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு ஊக்குவித்தார். கல்லூரியின் முதல்வர் (பொ) ஜெ.சக்திகுமார் வரவேற்புரையாற்றினார்.

மேலும், தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் புள்ளியியல் ஆய்வாளர் பூங்கோதை சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆர்.அரவிந்தகுமார் ங்கியின் வேலைவாய்ப்பு மற்றும் கடன் உதவி பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 2021-22ம் ஆண்டிற்கான கண்காட்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வழிகாட்டு கையேடு வெளியிடப்பட்டது.

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக கண்காட்சியில் அமைக்கப்பட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் வரைப்படங்களை பார்வையிட்டனர்.

இறுதியில் கல்லூரியின் உதவி பேராசிரியர் கலைவாணி நன்றியுரை கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!