தர்மபுரியில் தாய்சேய் நல புதிய கட்டடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பு
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில், 200 படுக்கை வசதியுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரா கால தாய் சேய் சிகிச்சை மைய கட்டிடத்தினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தொடர்ந்து 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 7 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்குகினார். மேலும் 3 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்குகினார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை சார்பில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில், பணி முடிக்கப்பட்டுள்ள 11 கட்டிடங்கள், ஆய்வகங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், கல்லூரி விடுதி, வேளாண் விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட சுமார் ரூ.7 கோடி என மொத்தம் ரூ.29.44 கோடி மதிப்பிலான முடிக்கப்பட்டுள்ள பணிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், கலெக்டர் திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu