தருமபுரி அருகே.நிலத்தை அபரிக்க முதியவர்கள் கொலை: மகன், பேரன்கள் என மூன்று பேர் கைது.

தருமபுரி அருகே.நிலத்தை அபரிக்க முதியவர்கள் கொலை: மகன், பேரன்கள் என மூன்று பேர் கைது.
X

ஆனந்தன், சக்திவேல், மோகன்குமார்

தருமபுரி அருகே.நிலத்தை அபரிக்க முதியவர்கள் கொலை: மகன், பேரன்கள் என மூன்று பேர் கைது.

தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அருகேவுள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்த வயது முதிர்ந்த முதியவர்களான துரைசாமி(85).இவரது மனைவி கோசலை (75) ஆகிய இருவரும் ஒரே சமயத்தில் இவர்களது வீட்டில் நேற்று சடலமாக மீட்டது தொப்பூர் போலீஸ்

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக இருவரது உடலையும் அனுப்பி வைத்ததை தொடர்ந்து விசாரணையை துவக்கியது போலீஸ்.. விசாரணையில் இறந்தபோன தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகனும் மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர், சுமார் பத்து ஏக்கர் நிலத்தினை பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பாக பிள்ளைகளுக்கும் முதியவர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததும் போலீஸ் தெரியவந்தது.

இந்த நிலையில் உடன் பிறந்த சகோதரிகளுக்கு நிலத்தில் பங்கு கொடுக்காமல் நிலத்தை நிலத்தை அபரிக்க திட்டமிட்டு பெற்ற தாய் தந்தையரை மகன் ஆனந்தன்(55) என்பவர் அவரின் மகன்களான சக்திவேல் (33) மோகன் குமார்(24) ஆகிய மூவரும் வீட்டில் தனியாக வசித்து முதியவர்களின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் நடத்தியதும், போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது, இதனை தொடர்ந்து மூவரையும் தொப்பூர் போலீசார் கைது செய்தனர்

உடன் பிறந்த சகோரிதகளுக்கு நிலத்தில் பங்கு போய் விடக்கூடாது என்பதற்காக வயது முதிர்ந்த பெற்ற தாய் தந்தையரையே மகன் தனது மகன்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!