தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
HIGHLIGHTS

ரேசன் அரிசி கடத்தியதாக கைதுசெய்யப்பட்ட காதர்.
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், எஸ்எஸ் ஐ ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் செந்தில்குமார் வேணுகோபால் முதல் நிலை காவலர் குமார் ஆகியோர் தர்மபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்தில் இருந்தபோது தர்மபுரி குள்ளனூர் சேர்ந்த பாபு என்பவரின் மகன் காதர் வயது 38 என்பவர், தலா 50 கிலோ எடையுள்ள 22 மூட்டைகளில் மொத்தம் சுமார் 1100 கிலோ ரேஷன் அரிசியை டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தினார். இதனையடுத்து காதர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.