தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள்

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, அங்கக வேளாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

மாவட்ட அளவில் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15000/- 2-ம் பரிசு ரூ. 10000/- 3-ம் பரிசு ரூ. 5000/- என வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1.00000/- 2-ம் பரிசு ரூ. 60.000/- 3-ம் பரிசு ரூ. 40.000/- என வழங்கப்பட உள்ளது.

எனவே சிறந்த விவசாயிகளுக்கான பரிசு பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாநில அளவில் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ. 100/- செலுத்த வேண்டும். மாவட்ட அளவில் விண்ணப்ப பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. வரும் 25ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!