தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு
X

கோப்புப்படம் 

அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் ஆங்காங்கேய பொதுமக்கள் ஒன்று திரண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் சரவெடிகள் உள்ளிட்ட வைகளை வெடிக்க கூடாது. அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

கட்டுப்பாடுகளை மீறுவது மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு ஒரு அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது இந்த கட்டுப்பாடுகளை மீறியும் அரசு வகுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீதும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அரசு விதிமுறையை மீறி பட்டாசுகள் வெடித்த 17 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!