சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி.!

சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி.!
X

தர்மபுரியில் சாலையோரம் எரிக்கப்படும் குப்பை

தர்மபுரியில் சாலையோரத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தருமபுரியில் நகராட்சியில் குப்பை கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லாததால் சாலையோரத்தில் குப்பைகளை எரிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சி, ஒரு நகராட்சி, 10 பேரூராட்சி மற்றும் 10 ஒன்றியங்கள் உள்ளது. மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊழியர்கள் மறைவான இடங்களில் குவித்து வைத்து எரிக்கும் நிலை உள்ளது.

குறிப்பாக தருமபுரி நகராட்சி பகுதியில் பச்சியம்மன் சுடுகாடு, எஸ்.வி.ரோடு, பச்சியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எரித்து வருகின்றனர். இதே போன்று இண்டூரில் சாலையோரத்தில் குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போதும் நிலைத்தடுமாறி கீழே விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சாலையில் எரிக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே இது போன்று நிலை தொடராமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!