விருத்தாசலம்- ஊராட்சியை கண்டித்து கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

விருத்தாசலம் அருகே தரைப்பாலம் முறையாக கட்டாத ஊராட்சியை கண்டித்து ஒப்பாரி வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் சுமார் 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 13லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைப்பாலம் கட்டப்பட்டது, இந்த பாலம் முறையாக கட்டப்படாததால்,ஊராட்சி நிர்வாகத்திடமும்,மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாலத்தின் அருகில் பாடைகட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!