பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஊதியமாக ரூபாய் 5000மாக உயர்த்தி தரவேண்டும், சதவீத அடிப்படையில் ஊனமுற்றோர்களுக்கு மாத ஊதியமாக 7000 ரூபாயையும், 80சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு இருந்தால் மாத ஊதியமாக ரூபாய் 5000 ஆயிரமும், மேலும் சதவீத அடிப்படையில் கணக்கீட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வட்டத் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் என். எஸ். அசோகன் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் கிளை செயலாளர்கள் மார்க்கெட் சேகர், ரங்கநாதன் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியில் சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார்யிடம் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu