விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். கேசவ பெருமாள், கோவிந்தராசு, பாலமுருகன், பச்சமுத்து, பிரபாகரன், தனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும், விருத்தாசலம் வட்டத்தில் நெல், மரவள்ளி, உளுந்து, தென்னை உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையால் அழிந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்க கோரியும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை கணக்கீடு செய்து தமிழ்நாடு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் புதிய வீடு கட்டித்தர கோரியும் விருத்தாசலம் நகர மற்றும் கிராமப்புற சாலைகளை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு பட்டுசாமி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டத்தலைவர் அறிவழகி, நகர செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன், நகர பொருளாளர் நடராஜன், வட்ட குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் போராட்ட விளக்க உரையாற்றினார்.
ஜீவா பூக்கடை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் நன்றி உரை நிகழ்த்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu