தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் அமித் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் ,விருத்தாசலத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் அமித் குமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப.மோகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மழைக்காலங்களில் மின் உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது, இடி, மின்னல் ஏற்படும்போது பாதுகாப்பான இடத்தில் தங்குவது, மழை பெய்து கொண்டிருக்கும்போது பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது உள்ளிட்ட மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி நகர்ப்புற வீதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இதில் ,வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியானது நகர்ப்புற முக்கிய வீதிகள் வழியாக சென்று பாலக்கரை சந்திப்பில் நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu