விருத்தாசலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வினர் விருப்ப மனு

விருத்தாசலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வினர் விருப்ப மனு
X

விருத்தாசலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்லில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

விருத்தாசலத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருத்தாசலத்தில் அ.தி.மு.க. வின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் அறிவுறுத்தலின் பேரில் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 17,18வது வார்டு உறுப்பினருக்கான விருப்பமானவை கடலூர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ரவிச்சந்திரனிடம் விருப்ப மனுவை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சந்திரகுமார் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அருண்,விருதாச்சலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரை,மாவட்ட மாணவரணி செயலாளர் அருளழகன்,நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து,தகவல் தொழில்நுட்ப மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் மாதவன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்,

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்