விருத்தாசலம் அருகே 25 ஏக்கர் நெற்பயிர் மழை வெள்ளத்தால் சேதம்: விவசாயிகள் வேதனை

விருத்தாசலம் அருகே 25 ஏக்கர் நெற்பயிர் மழை வெள்ளத்தால் சேதம்: விவசாயிகள் வேதனை
X

விருத்தாசலம் அடுத்த வி சாத்தமங்கலம் கிராமத்தில் கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

விருத்தாசலம் அருகே சுமார் 25 ஏக்கர் நெற்பயிர் மழை வெள்ளத்தால் பாதிப்பு விவசாயிகள் வேதனை..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வி சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தற்போது பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏரி, முனியப்பர் குட்டையில் அருகில் ஒரு சிலர் தடுப்பு கட்டை கட்டியதால் மழை வெள்ளத்தால் நிரம்பி அருகே உள்ள சுமார் 25 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து வருவாய் வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!