காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
X

பாளையங்கோட்டை கிராமத்தில் கானூர் செல்லும் சாலையில் வயல்வெளி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் சுவற்றை துளையிட்டு ஒரு இலட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த பாளையங்கோட்டை கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் கானூர் செல்லும் சாலையில் வயல்வெளி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை எண் 2444 அமைந்துள்ளது. இந்த கடைக்கு நேற்று நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் சுவற்றினை துளையிட்டு 15 அட்டைப் பெட்டிகளில் இருந்த ரூ.1 இலட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்

ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் மதுக்கடை இருப்பதால் மதுக்கடைக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை எனவும், கடைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர், கடையை நீண்ட காலமாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் இதனை செய்திருக்க கூடும் என இதுகுறித்து சோழதரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளனர்.

டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியை சுற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், மேலும் டாஸ்மார்க் கடையில் உள்ள முக்கியமாக உயர் ரக மது பாட்டில்களை விட்டுவிட்டு குறைந்த விலை மது பாட்டில்களை மட்டுமே அள்ளிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!