சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்வு

சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்வு
X

பைல் படம்.

மார்ச் முதல் நாளான இன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கேஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை 1118.50 ரூபாயாக .உள்ளது. சில மாதமாக உயர்த்தப்படாத சிலிண்டர் விலை இன்று உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போல் வணிக உபயோக சிலிண்டரின் விலையும் ரூ. 351 அதிகரித்து ரூ. 1917 ல் இருந்து ரூ. 2268 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!