வால்பாறை அருகே சத்துணவு மையத்தை உடைத்த காட்டு யானைகள்

வால்பாறை அருகே சத்துணவு மையத்தை உடைத்த காட்டு யானைகள்
X

காட்டு யானைகள் சேதப்படுத்திய சத்துணவு கூடம் 

யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதிக்கு நேற்று இரவு வனத்தில் இருந்து வெளியேறிய 9 யானைகள் கூட்டமாக வந்தது.

ஊருக்குள் சுற்றி திரிந்த யானைகள் கூட்டம், அங்குள்ள நடுநிலைப்பள்ளியின் அருகே சென்றது. பின்னர் அங்குள்ள சத்துணவு மையத்தின் ஜன்னல் கதவை உடைத்து, உள்ளே இருந்த பருப்பு, முட்டை, அரிசி, போன்றவைகளை சாப்பிட்டு சத்துணவு மையத்தையும் சேதப்படுத்தியது. மேலும் பொருட்களையும் துதிக்கையால் தூக்கி வீசி சேதப்படுத்தி சென்றது.

தகவல் அறிந்து வந்த வால்பாறை வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story