கோவையில் வாக்காளர் பட்டியல் 2 நாள் திருத்த முகாம்

கோவையில் வாக்காளர் பட்டியல் 2 நாள் திருத்த முகாம்
X

பைல் படம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவை ஆட்சியர் கிரந்திகுமார் அறிவுறுத்தல்

கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடப்பதாக இருந்தது.

அது தற்போது வருகிற 25, 26 ஆகிய தேதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது ஆகிய பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம். அதன்படி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8 ஆகியவற்றை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

பிரத்யேக இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மொபைல் செயலியை தரவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்க இயலும்.மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை செய்வதற்கு அடுத்த மாதம் 9-ந்தேதிவரை விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் மேற்கண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!