தென்மேற்கு பருவமழை தீவிரம் - ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை தீவிரம் - ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு
X

பலத்த மழையால், வால்பாறை கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் ஆனைமலை ஆழியாறு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வால்பாறை மலைப்பகுதிகளில் இருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் வரக்கூடிய கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

கொரனோ காலம் என்பதால், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் யாரும் அருவியின் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால், அருவியையும் வெள்ளப்பெருக்கையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

Tags

Next Story
ai business transformation