கொரோனா பாதிப்பு - சுகாதார மையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. ஆய்வு

கொரோனா பாதிப்பு - சுகாதார மையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. ஆய்வு
X

கோவை மாவட்டம் ஆனைமலை, சேத்துமடை, காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.

ஆனைமலை, சேத்துமடை, காளியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில், கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கோவை மாநகர பகுதிகளில் மட்டுமின்றி, இதர பகுதிகள், கிராமப்புறங்களிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதேபோல், தொடர்ச்சியாக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலும் கொரோனா பெரும் அளவில் பரவியுள்ளது.

இந்நிலையில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைமலை, சேத்துமடை, காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் கம்மாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 25 முன்கள பணியாளர்களுக்கு, நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார். சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புணர்வுடன், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!