வால்பாறை தொகுதியில் அதிமுக வெற்றி

வால்பாறை தொகுதியில் அதிமுக வெற்றி
X
வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல்கந்தசாமி12,307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1,43, 917 வாக்குகள் பதிவாகின. தபால் வாக்கு உட்பட 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல்கந்தசாமி 71,128 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் ஆறுமுகம் 58,821 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோகிலா 7588 வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.

வால்பாறை தொகுதியில் 12,307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியிடம் தேர்தல் அலுவலர்கள் வெற்றிக்கான சான்றிதழ் வழங்கினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது