தொடர் மழை எதிரொலி- நிரம்பியது சோலையார் அணை

தொடர் மழை எதிரொலி- நிரம்பியது  சோலையார் அணை
X

சோலையார் அணை

தொடர் மழை எதிரொலியாக, கோவை மாவட்டம் சோலையார் அணையானது தனது முழு கொள்ளளவான 165 அடியை எட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் அணை, ஆசியா கண்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். வால்பாறை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து சோலையார் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது.

நேற்று காலை, நிலவரப்படி 159 அடியை எட்டிய நிலையில், இன்று பெய்த கனமழையால் 165 அடியான முழு கொள்ளளவு பூர்த்தியானது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!