வால்பாறையில் கஞ்சா விற்ற பெண் கைது

வால்பாறையில் கஞ்சா விற்ற பெண் கைது
X

கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி

1.300 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் 79 ஆயிரம் சிக்கியது.

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரில் வசித்து வரும் முத்துலட்சுமி. 43 வயதான இவர், அப்பகுதியில் தன்னுடைய மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். தற்போது மழையின் காரணமாக அவருடைய வீடு இடிந்த உள்ளதாக தெரிகிறது. காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் 3 சென்ட் நிலத்தில் செட் அடித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் வருவாய்த்துறை வட்டாட்சியர் ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ். இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டில் கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வால்பாறை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது, 1.300 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் 79 ஆயிரம் சிக்கியது. இதையடுத்து முத்துலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவருடைய கணவர் கஞ்சா விற்பனையில் பல முறை சிறை சென்றது தெரியவந்துள்ளது. தற்போது அவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்