அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பழங்குடியின மக்கள் மனு
கோவை மாவட்டம் ஆனைமலை டாப்சிலிப் கோழிக்கமுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், டாப் சிலிப் சுற்றுவட்டாரத்தில் மலசர், மலைப்புலையர், காடர் இனத்தை சேர்ந்த 185 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள மக்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வனத்துறையில் யானை வளர்ப்பு, உதவி பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், சூழல் கண்காணிப்பாளர் என பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்கள் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும், தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டனர். தரமான கான்கிரீட் வீடுகளை கழிப்பறை குளியலறை வசதியுடன் கட்டி தர வேண்டும். யானை முகாமிற்கு அருகிலேயே கிராமம் இருப்பதால் கிராமத்திற்கும் யானை முகாமிற்கும் இடையில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும். கிராமத்திலேயே குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
தங்கள் கிராமத்திற்கு மின்வசதி செய்து தர வேண்டும். டாப் சிலப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முழு நேர மருத்துவர் செவிலியரை பணியமர்த்த வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்தி காலை மாலை பேருந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு தொழில் வாய்ப்பு ஈட்ட கூடிய பயிற்சி அளிக்க வேண்டும். கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu