ஆனைமலை: கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை - வனத்துறையினர் நிம்மதி

ஆனைமலை: கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை - வனத்துறையினர் நிம்மதி
X

ஆனைமலை முகாமில், கும்கி யானைகளுக்கு கொரோனா மருத்துவப்பரிசோதனை நடைபெற்றது.

கோவை மாவட்டம், ஆனைமலை கும்கி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது, பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. எனினும், முழுமையாக பாதிப்பு தணியவில்லை. அத்துடன், விலங்குகளுக்கும் பரவத் தொடங்கியது, பலரையும் கவலைக்குள்ளக்கியது.

சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில், அண்மையி 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம், தொற்றுக்கு உயிரிழந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அவ்வகையில், கோவை மாவட்டம் முதுமலை மற்றும் ஆனைமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்த யானைகளுக்கு, அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. யானைகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உத்திரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன. அதன்படி, ஆனைமலை கோழிகமுத்தி கும்கி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது, வனத்துறையினரிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!