கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு

கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு
X

விடுவிக்கப்பட்ட சிறுத்தை.

குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது.

கோவை குனியமுத்தூர் அருகே பாழடைந்த குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தை பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. மேலும் வனத்துறையினரின் நுட்பமான முடிவால் சிசிடிவி காமிரா காட்சிகளின் உதவியின் படி கூண்டுக்குள் நுழைந்து சிறுத்தையை லாவகமாக பிடித்தனர். கூண்டு வைத்து ஐந்து நாட்கள் ஆகியும் வனத்துறைக்கு போக்கு காண்பித்து வந்த சிறுத்தையை நிதனமாக காத்திருந்து பிடித்தனர். மேலும் பிடிப்பட்ட சிறுத்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்த பின்னர், உணவாக கோழி இறைச்சி வைக்கப்பட்டு இன்று நண்பகல் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. நகருக்குள் புகுந்த சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாரட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil