மரத்தில் சிக்கிய கரடி; வனத்துறை மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பு

மரத்தில் சிக்கிய கரடி; வனத்துறை மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பு
X

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி.

தேன் சாப்பிடுவதற்காக சில்வர் ஓக் மரத்தின் மீது ஏறிய கரடி ஒன்று, மரத்தின் பொந்தில் சிக்கிக் கொண்டது.

கோவை மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில், ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் நேற்று தேன் சாப்பிடுவதற்காக சில்வர் ஓக் மரத்தின் மீது ஏறிய கரடி ஒன்று, மரத்தின் பொந்தில் சிக்கிக் கொண்டது.

இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் கரடியை மரத்தில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் முயற்சி பயனளிக்காத நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கரடிக்கு வனக்கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கரடியை மனித – விலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து கரடியின் உடல் நிலை தேறியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கூண்டில் அடைத்து கொண்டு செல்லப்பட்ட கரடியை, ஆண்டிபாரா சோலை என்ற அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்