கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழப்பு

கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழப்பு
X
கோவை மாவட்டம் வால்பாறையில், கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். 35 வயதான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் எலக்ட்ரீயனாக வேலை செய்து வந்தார்.

நேற்றிரவு வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஒன்று, மோகன்ராஜை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வால்பாறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!