வால்பாறையில் உடல்நலக்குறைவால் குட்டி யானை உயிரிழப்பு

வால்பாறையில் உடல்நலக்குறைவால் குட்டி யானை உயிரிழப்பு
X

உயிரிழந்த குட்டி யானை.

உடல் நலக்குறைவால் உணவு உட்கொள்ளாமல் இருந்த நிலையில் ஆண் குட்டி யானை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடி வருகிறது. இந்நிலையில் இரண்டு வயதுள்ள குட்டியானை ஒன்று தோணிமுடி எஸ்டேட் இரண்டாவது பிரிவில் உள்ள ஃபீல்டு எண் 48 ல் நேற்று உடல்நலக்குறைவால் எழுந்து நடமாட முடியாத நிலையில் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் இருந்துள்ளது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த குட்டியானை உயிரிழந்துள்ளது.

இதைத்தொடர்ந்து குட்டி யானையின் உடலை மருத்துவக்குழு உடற்கூறாய்வு மேற்க் கொண்டனர். அப்போது உடல் நலக்குறைவால் உணவு உட்கொள்ளாமல் இருந்த நிலையில் ஆண் குட்டி யானை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதியிலேயே குட்டியானையின் உடலை குழிதோற்றி புதைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!